தொலைபேசி திருடியவர்கள் வசமாக மாட்டினார்கள் , 2 பேர் கைது
கந்தர்மடம் – பலாலி வீதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்திற்குள் புகுந்து சுமார் 6 இலட்சம் ரூபா பெறுமதியான தொலைபேசிகளைத் திருடிச் சென்ற குற்றச்சாட்டில் இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கந்தர்மடம் பலாலி வீதியின் ஆலடிப் பகுதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் கடந்த 31ஆம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் உட்புகுந்த திருடர்கள் 18 தொலைபேசிகளை திருடிச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு இருந்தது .
இந்த நிலையில் தொலைபேசி விற்பனை நிலையத்திலிருந்து திருடப்பட்ட தொலைபேசி ஒன்றில் சிம் அட்டையைப் பயன்படுத்தப்பட்டதை தொடர்ந்து, தொலைபேசியின் EMI இலக்கத்தை வைத்து தொலைபேசியின் எண்ணை அறிந்துகொண்ட பொலிஸார், அதை பயன்படுத்திய நபரை கைதுசெய்தார்கள். கைதுசெய்யப்பட்டவர் வழங்கிய தகவலை கொண்டு மற்றய நபரும் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இரண்டுபேரும் 19 மற்றும் 20 வயதுடையவர்கள் நபர்கள் என்றும் , அவர்கள் கோப்பாயைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சந்தேகநபர்களிடமிருந்து 10 தொலைபேசிகழும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.