Sun. Apr 12th, 2026

தொற்று நீக்கம் செய்து கடைகள் மீண்டும் திறப்பு

யாழில் மூடப்பட்ட கடைகள் தொற்று நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் இன்று (4) திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யாழ் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக மூடப்பட்ட கடைகளே இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து வருகை தந்து கொரோனா தொற்றுக்கு உள்ளானவரின் உறவினர்களின் நான்கு கடைகள் யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரியினால் மூடப்பட்டிருந்து. குறித்த கடை உரிமையாளர்களுக்கு முதலாவது PCR பரிசோதனை முடிவுகள் இன்று கிடைக்கப்பெற்றது. இதில் எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்பதன் அடிப்படையில் இன்றைய தினம் குறித்த கடைகளை திறப்பதற்கு, சுகாதாரப் பகுதியினரால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று காலை குறித்த கடைகள் அனைத்தும் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed