Sat. Apr 11th, 2026

தொண்டைமானாறு வடக்கு பகுதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

வளமான நாடும் அழகான வாழ்க்கையும் என்ற தொனிப்பொருளின் கீழ் பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு மூன்று நாள் தேசிய வேலைத்திட்டம் ஆனது பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஏற்பாட்டில் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினரால் இன்றையதினம் (2026.01.07)

வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் எல்லைக்குட்பட்ட தொண்டைமானாறு வடக்கு கிராமசேவையாளர் பிரிவில் சமூக அளவிலான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமானது வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினர், பருத்தித்துறை பிரதேச செயலகத்தினர் மற்றும் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் இணைந்து வீடுகள் தோறும் களத்தரிசிப்பு மேற்கொண்டதுடன் இதன் போது 243 ஆதனங்கள் பரிசோதிக்கப்பட்டது. இதன் போது 81 இடங்கள் நுளம்பு பரவக்கூடிய சூழலாக இனங்காணப்பட்டதுடன் 07 ஆதன உரிமையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டதுடன் நுளம்பு குடம்பிகளுடன் சுற்றாடலினை பேணிய  08 குடியிருப்பாளர்களிற்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed