தொண்டைமானாறு காட்டுப்புலம் கடற்கரையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு
தொண்டைமானாறு காட்டுப்புலம் கடற்கரையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
கம்பர்மலை செம்பாடு பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரமானந்தம் ராசேந்திரன் (வயது 52) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். இவரின் சையிக்கிள் கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டதுடன் இவர் அணிந்த சேட் சையிக்கிளின் முன் கூடைக்குள் காணப்பட்டுள்ளது. ஆழாமான நீர் இல்லாத போதிலும் இவர் உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. சடலத்தை பார்வையிட்ட மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் அவர்கள் பிரேதப் பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார். சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.