தொண்டமானாறு கடற்கரையில் இந்தியாவில் இருந்து படகுமூலம் வந்தவர் கைது

இன்று அதிகாலை வல்வெட்டித்துறை தொண்டமானாறு கடற்கரை பகுதியில் வைத்து கடற்படையால் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார். இந்தியாவில் இருந்து படகுமூலம் வந்திறங்கிய பொழுதே கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலையை சேர்ந்த இவரை ஏற்றிச்செல்வதற்காக ஹியஸ் வானில் வந்து காவல் இருந்த மேலும் மூன்று பேரும் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள். கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படியே இவர்கள் கைது செய்ய பட்டதாகவும் நாளைய தினம் இவர்கள் நீதி மன்றத்தில் முன்னிலை படுத்தப்படவுள்ளார்கள்