தொண்டமனாறு கடற்கரையில் நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞன் இன்று உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மந்திகை காந்தியூர் எனும் இடத்தைச் சேர்ந்த கந்தசாமி கஸ்தூரன் (வயது 26) எனும் இளைஞரே உயிரிழந்துள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
தொண்டமனாறு கடற்பகுதியில் தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த வேளையில் குறித்த இளைஞர் நீரில் அடித்துச் செல்லப்படுள்ளார். இதனால் ஏனைய இளைஞர்கள் தேடுதல் நடாத்திய போதும் இளைஞர் மீட்கப்படவில்லை. அதன் பின்னர் உறவினர்கள் பலர் தேடியும் இளைஞரை மீட்க முடிய நிலையில் கடற்படை சுழியோடியினரால் குறித்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தொண்டமனாறு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியினூடன நீரோட்டம் அதிகரித்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது.