தொடர்ந்து துர்நாற்றம் வீசும் நெல்லியடி பஸ்நிலைய கழிவறை, பிரதேச சபை பாராமுகம்
நெல்லியடி பஸ்நிலையத்தில் அமைந்து உள்ள மலசல கூடம் தொடர்ந்து துர்நாற்றம் விசுகின்றது. பிரதேசசபை இதனை துப்பரவு செய்வது இல்லாதபடியால் பஸ்ஸிக்கு நிற்கும் பயணிகள் துர்நாற்றம் விசுவதால் சுகாதாரம் அற்ற நிலை காணப்படுகின்றது. வடமராட்சி தெற்க்கு மேற்கு பிரதேசசபைக்கு பலமுறை கவனத்திற்கு கொண்டு வந்தும் எந்தவித நடவடிக்கையும் நிரந்தரமாக எடுக்கவில்லை.
கடந்த வாரம் நியூஸ் தமிழில் வந்த செய்தியை தொடர்ந்து ஒரு வாரம் மட்டும் துப்புரவு நடவடிக்கை மேற்கொண்ட பிரதேச சபை மீண்டும் அதனை கைவிட்டுள்ளது
இதனால் இன்று பொதுமக்கள் கரவெட்டி பிரதேச செயலர் ஈ. தயாரூபான் அவர்ளுக்கு முறையிட்டார்கள். உடனடியாக பாதிக்கப்பட்ட இடத்துக்கு வருகை தந்து பார்வையிட்டு நடவடிக்கைக்கு உறுதிமொழி தந்து சென்றுள்ளார். நெல்லியடி பஸ் நிலையத்திற்குள் 100 க்கு மேற்பட்ட துவிச்சக்கரவண்டிகள் நிற்பதையும் அவதானித்தார். நாள் ஒன்றுக்கு ஒரு துவிச்சக்கரவண்டி விகிதம் களவு போவதாக பொதுமக்கள் முறையிட்டார்கள். அதற்கு நடவடிக்கை எடுத்து துவிச்சக்கரவண்டிகள் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் உறுதிமொழிதந்துள்ளார்