Mon. May 18th, 2026

தொடர்ந்து சாதனைகள் படைக்கும் விராட் கோலி

நேற்று முன்தினம் இடம்பெற்ற டி20 போட்டியில் 72 ஓட்டங்கள் பெற்றதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 22 அரைசதங்களை பெற்று அதிக அரைசதம் அடித்த பெருமையை கோலி தனதாக்கிக் கொண்டார். இதற்கு முடித்தல் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா 21 அரைச்சதங்கள் பெற்று சமநிலையில் இருந்தனர்.
இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் மொகாலியில் நடைபெற்றது. இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 72 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மேலும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வகை கிரிக்கெட்டிலும் 50-க்கு மேல் சராசரி வைத்திருக்கும் ஒரு பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் கோலி தனதாக்கிக் கொண்டார்.
டி20 கிரிக்கெட்டில் 71 போட்டிகளில் 66-ல் பேட்டிங் செய்து 2441 ரன்கள் அடித்து. சராசரி 50.85 ஐயும் ஒருநாள் போட்டியில் 60.31 சராசரியும், டெஸ்ட் போட்டியில் 53.14 சராசரியும் கோலி வைத்துள்ளார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed