Sat. Dec 7th, 2024

தொடர்ந்தும் ஐக்கிய தேசிய கடசிக்குள் இழுபறி

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும் வீடமைப்பு மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சருமான சஜித் பிரேமதாசாவின் ஆதரவாளர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பாரளுமன்ற உறுப்பினர்களிடத்திலும் , கட் சியின் நடவடிக்கை குழுவிலும் ஜனாதிபதி வேட்ப்பாளர் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்துமாறு கோரவுள்ளனர்.
பிரதமருக்கும் அமைச்சர் சஜித்துக்கும் இடையில் இடம்பெற்ற தனிப்பட்ட சந்திப்பில் முடிவு எதுவும் எட்டப்படாததாலேயே இந்த முடிவுக்கு அவர்கள் வந்ததாக தகவல்கள் கூறுகின்றன. தனிப்பட்ட இந்த சந்திப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தானும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக சஜித் இடம் தெரிவித்துள்ளததாகவும் , இத்தேர் நேரத்தில் சஜித்தும் தனக்கும் போட்டியிடும் எண்ணம் உள்ளதாக பிரதமரிடம் தெரிவித்துள்ளார். பரஸ்பர முடிவு ஒன்றும் எட்டப்படாததாலேயே சஜித் ஆதரவாளர்கள் வாக்கெடுப்பு நடத்தும் கோரிக்கைக்கு வந்ததாக தெரிகின்றது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்