தொடரும் பாதுகாப்பற்ற ரயில் கடவை விபத்து, 2 பேர் பலி ,
அம்பலாங்கொடை, கந்தேகொடவில் நேற்று பிற்பகல் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் வைத்து வான் ஒன்றை புகையிரம் ஒன்று மோதியுள்ளது . புகையிரத கடவையை கடக்க முற்பட்ட வானே புகையிரத்துடன் இந்த விபத்தில் சிக்கியுள்ளது. இந்த சம்பவத்தின் போது வேனில் பயணித்த தாய் மற்றும் ஒரு மகன் உயிரிழந்துள்ளார்கள் என்றும் தந்தையும் மற்றுமொரு மகனும் படுகாயமடைந்தநிலையில் அம்பலாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்