Thu. Mar 28th, 2024

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு நவ கிரகங்களின் பயணத்தால் தை மாதம் பொறுமையும் நிதானமும் தேவைப்படும் மாதமாக அமைந்துள்ளது. தை மாதம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ரிஷபத்தில் ராகு, விருச்சிகத்தில் கேது, செவ்வாய், தனுசு ராசியில் சுக்கிரன், மகர ராசியில் சூரியன், சனி, புதன், கும்ப ராசியில் குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன.
கிரகப்பெயர்ச்சிகளைப் பார்த்தால் 1ஆம் தேதி மகர ராசியில் புதன் வக்ரம் ஆரம்பமாகிறது. 3ஆம் தேதி செவ்வாய் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பயணம் செய்கிறார். 16ஆம் தனசு ராசியில் சுக்கிரன் வக்ரம் முடிகிறது. 22ஆம் புதன் வக்ர முடிவுக்கு வருகிறது. 30ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்கு பயணம் செய்கிறார்.
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் ராசியில் ராகு, களத்திர ஸ்தானத்தில் கேது, ஒன்பதாம் வீட்டில் சூரியன், சனி, புதன், அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் சுக்கிரன், தொழில் ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன.

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்கள் ராசி அதிபதி அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். வக்ர நிலையில் சஞ்சரித்த ராசி அதிபதி வக்ர நிவர்த்தி அடைகிறார்.
வியாபாரத்தில் முதலீடுகளில் கவனம் தேவை. தாய்வழி சொந்தங்கள் உதவி கிடைக்கும் வீட்டில் சுப நிகழ்ச்சி நடைபெறும்.
கணவன் மனைவி கவனம்
செவ்வாயும் சுக்கிரனும் எட்டாம் வீட்டில் இணைவதால் கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம். கவனமாக இருக்கவும். பேச்சில் நிதானம் தேவை. வண்டி வாகனங்களில் கவனம் தேவை. யாரை நம்பியும் பணம் கொடுக்கக் கூடாது மாணவ மாணவிகள் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பங்குச்சந்தை முதலீடுகளில் கவனம் தேவை. அவசரப்பட்டு முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.
ஆரோக்கியத்தில் அக்கறை
ஏழுக்குறிய செவ்வாய் எட்டாம் வீட்டில் பயணம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவுகள் எட்டிப்பார்க்கும். கணவன் மனைவிக்கு இடையே சண்டைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்லவும். பதற்றம், கோபத்தை தவிர்க்கவும். உணர்வு பூர்வமாக முடிவு எடுப்பதை விட அறிவுப்பூர்வமாக முடிவெடுப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். கூரான ஆயுதங்களை கவனமாகப் பயன்படுத்துவது நல்லது. கோபத்தைக் கட்டுப்படுத்தவும் பதற்றப்பட வேண்டாம்.
காரிய வெற்றிக்குப் பரிகாரம்
யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்துப் போட்டு பணம் கடனாகத் தர வேண்டாம். முயற்சி செய்யுங்கள் வீடு கட்ட புது வீடு வாங்க வங்கிக்கடன் கிடைக்கும், திடீர் பண வரவு வந்தாலும் செலவில் சிக்கனம் தேவை. சுப செலவுகள் அதிகம் வரும். சகோதர சகோதரிகள் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள். மூத்த குடிமக்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்கள் கூர்மையான பொருட்களைக் கையாளும் போது கவனம் தேவை. திருமண சுப காரியங்களில் தடைகள் ஏற்படலாம். மாத பிற்பகுதியில் நோய்கள் நீங்கி நன்மை அதிகரிக்கும். செவ்வாய்கிழமைகளில் முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபட நன்மைகள் நடைபெறும்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்