Fri. Jan 17th, 2025

தேயிலையில் கலப்படம், பலநாள் திருடா்கள் இருவா் சிக்கினா்.

பாவனைக்கு உகந்த தேயிலையுடன் பாவனைக்கு உதவாத தேயிலையை கலப்படம் செய்து கொண்டிருந்த இருவா் தலவாக்கலையில் கைது செய்யப்பட்டிருக்கின்றாா்.

சந்தேகநபர்கள் இருவரும் நேற்றிரவு தலவாக்கலை விசேட அதரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,

இவர்கள் நீண்ட நாட்களாக குறித்த செயற்பாட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட 200 கிலோகிராம் கழிவு தேயிலைத்தூள்

தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் பிணையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்,

எதிர்வரும் நாட்களில் அவர்களை நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தலவாக்கலை விசேட அதிரடிப் படையினரும், தலவாக்கலை பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்