தேசிய வலைப்பந்தில் வடமாகாண கல்வித் திணைக்கள அணி மகுடம் சூடியது
அரச உத்தியோகத்தர்களுக்கான தேசிய மட்ட பி பிரிவு பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியில் வடமாகாண கல்வித் திணைக்கள அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
அரச உத்தியோகத்தர்களுக்கான தேசிய மட்ட வலைப்பந்தாட்ட போட்டிகள் மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியின் இறுதியாட்டத்தில் வடமாகாண கல்வித் திணைக்கள அணியை எதிர்த்து விமானப் படை அணி மோதியது. முதல் பாதியாட்டத்தில் வடமாகாண கல்வித் திணைக்களத்தின் ஆட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் விமானப்படை அணி திணறியது. இதனால் வடமாகாண கல்வித் திணைக்கள அணி முதல் பாதியாட்டத்தில் 9:5 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தனர்.

இரண்டாம் பாதியாட்டத்தில் விமானப்படை அணி பல்வேறு புதிய நுட்பங்களை பயன்படுத்தி களம் இறங்கி ஆட்டத்தை சமநிலைப்படுத்த இறுதி நிமிடங்களில் ஆட்டம் விறுவிப்பின் உச்சக் கட்டத்தை எட்டியது. பரபரப்பாக இரு அணிகளும் பலப் பரீட்சை நடாத்தினர். இறுதியில் வடமாகாண கல்வித் திணைக்கள அணி 16:14 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.