தேசிய மாணவர் படையணிக்கான நேர்முகத் தேர்வு

தேசிய மாணவர் சிப்பாய்கள் படை அணியினால் அதிபர்களை NCC சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் தேர்வு நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை 8:30 மணிக்கு 20வது படைப்பிரிவு யாழ்ப்பாணம் தலைமை காரியாலயத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சி நெறியில் பங்குபெற ஆர்வமுள்ள அதிபர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது. இவ் விண்ணப்பங்களை பூரணப்படுத்தி வலய கல்வி பணிப்பாளர் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர்களிடம் சிபாரிசுகளை பெற்று நேர்முக பரீட்சையில் கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவங்களை 0772487071 என்னும் WhatsApp இலக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.