Sat. Apr 11th, 2026

தேசிய மனைப்பொருளியல் திறன் போட்டியில் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி மாணவி சாதனை

கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியைச் சேர்ந்த செல்வி.நிவேதனா குகதாசன் அவர்கள் 2025 ஆம் ஆண்டிற்கான தேசிய மனைப்பொருளியல் திறன் விருத்திப் போட்டியில் 9ம் இடத்தைப் பெற்றுள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மனைப்பொருளியல் திறன் போட்டி அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.
இதில் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியைச் சேர்ந்த செல்வி.நிவேதனா குகதாசன்
“An Investigation into Electricity Conservation Practices &  Potential Wastage” எனும் தலைப்பில் ஆய்வுச் செயற்றிட்டத்தினை சமர்ப்பித்திருந்தார். தேசிய மட்ட ஆய்வுக்குழு அவரது ஆய்வுச் செயற்றிட்டத்தினை மதிப்பீடு செய்து தேசிய மட்டத்தில் 09 ஆவது இடத்தை பெற்றுள்ளார்.
வடக்கு மாகாண மட்டத்தில் நடைபெற்ற போட்டியில் 10 பேர் கொண்ட வடமாகாண மட்ட அணியானது தெரிவு செய்யப்பட்டது. பின்னர் ஒவ்வொரு மாகாண மட்டத்திலும் இருந்து வந்த மொத்தம் 90 கொண்ட தேசியணியுடனான இறுதி முன்வைப்பு மூலம் மொத்தம் 10 தேசிய மட்ட நிலையிடங்கள் தெரிவு செய்யப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த யா/உடுவில் பெண்கள் கல்லூரி தேசிய மட்டத்தில் 10 ஆவது நிலையிடத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed