தேசிய மட்ட வலுதூக்கும் போட்டி எதிர்வரும் 7ம், 8ம் திகதிகளில்
இலங்கை பாடசாலைகள் வலுதூக்கும் சம்மேளனம் நடாத்தும் இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட வலுதூக்கும் போட்டி எதிர்வரும் 7ம், 8ம் திகதிகளில் கேகாலை ராஜகிரிய மகா வித்தியாலய உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. 16, 18, 20 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பெண்களிற்கான போட்டிகளாக நடைபெறவுள்ளது. போட்டிகளில் பங்கு பற்றும் பாடசாலைகள் இலங்கை பாடசாலைகள் வலுதூக்கும் சம்மேளனத்தின் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர் க.கனகராஜாவுடன் தொடர்பு ( 0770761700 ) கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.