தேசிய மட்ட வலுதூக்கல் போட்டியில் யாழ் வலுதூக்கும் கழகம் 9 தங்கப் பதக்கங்கள்
இலங்கை வலுதூக்கும் சங்கத்தினால் நடாத்தப்பட்ட தேசிய மட்ட வலுதூக்கல் போட்டியில் யாழ் வலுதூக்கும் கழகம் 9 தங்கப் பதக்கங்கள் உட்பட 14 பதக்கங்களை கைப்பற்றியதுடன் விஜயபாஸ்கர் ஆர்ஷிகா கனிஸ்ட மற்றும் சிரேஷ்ட போட்டிகளில் சிறந்த வலுதூக்கும் வீராங்கனையாகவும் தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கை வலுதூக்கும் சங்கம் நடாத்திய தேசிய வலுதூக்கும் போட்டி அண்மையில் பண்டாரகம உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இப்போட்டிகள் இளையோர், கனிஸ்ட, சிரேஷ்ட பிரிவுகள் என நடைபெற்றது.
இதில் யாழ் வலுதூக்கும் கழகத்தை சேர்ந்த வி.ஆர்ஷிகா 63 கிலோ நிறைப் பிரிவில் தங்கப் பதக்கத்தையும், அதே நிறைப் பிரிவில் ஜெ.பஜீனா வெள்ளி பதக்கத்தையும், 72 கிலோ நிறைப் பிரிவில் ஏ.சானியா தங்கப் பதக்கத்தையும், கே.ரஜீனா தங்கப் பதக்கத்தையும், 84 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவில் ஜெ.மேரிலக்சிகா தங்கப் பதக்கத்தையும், 84 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவில் வி.ஐஸ்வர்யா தங்கப் பதக்கத்தையும், 120 கிலோ நிறைப் பிரிவில் எஸ். திவானுஜன் தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
இவர்களின் பயிற்றுவிப்பாளர் விஜயபாஸ்கர் 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான 105 கிலோ நிறைப் பிரிவில் தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
இதேபோல் இளையோர் மற்றும் கனிஸ்ட போட்டிகளிலும் பதக்கங்களைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.