தேசிய மட்ட வலுதூக்கல் சென் பற்றிக்ஸ் கல்லூரி பதக்க வேட்டை
இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட வலுதூக்கல் போட்டியில் யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரி ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்கள் உட்பட 4 பதக்கங்களைக் கைப்பற்றினர்.
இலங்கை பாடசாலைகளுக்கு வலுதூக்கும் சம்மேளனம் நடாத்திய தேசிய மட்ட வலுதூக்கல் போட்டிகள் நேற்று கேகாலை ராஜகிரிய மகா வித்தியாலய உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதில் யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்து 16 வயதிற்குட்பட்ட 93 கிலோ எடைப் பிரிவில் அபிஷேக் 330 கிலோ பளுவைத் தூக்கி தங்கப் பதக்கத்தையும், 120 கிலோ எடைப் பிரிவில் எக்சறோன் 230 கிலோ பளுவைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும், 83 கிலோ எடைப் பிரிவில் கபில்ராஜ் 285 கிலோ பளுவைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும், 18 வயதிற்குட்பட்ட 66 கிலோ எடைப் பிரிவில் உதயராஜ் 300 கிலோ பளுவைத் தூக்கி வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.