தேசிய மட்ட வலுதூக்கலில் வைத்தீஸ்வராக் கல்லூரிக்கு நான்கு பதக்கங்கள்
இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட வலுதூக்கல் போட்டியில் யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரி இரு தங்கப் பதக்கங்கள் ஒரு வெள்ளி ஒரு வெண்கலம் உட்பட நான்கு பதக்கங்களை சுவீகரித்தனர்.
இலங்கை பாடசாலைகள் வலுதூக்கும் சம்மேளனம் நடாத்திய தேசிய மட்ட வலுதூக்கல் போட்டி நேற்று கேகாலை ராஜகிரிய மகா வித்தியாலய உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதில் யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த கே.ஜெசின் 16 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் 93 கிலோ எடைப் பிரிவில் 270 கிலோ பளுவைத் தூக்கி தங்கப் பதக்கத்தையும், 18 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் 57 கிலோ எடைப் பிரிவில் 150 கிலோ பளுவைத் தூக்கி தங்கப் பதக்கத்தையும், எம். சோபனா 84 கிலோ எடைப் பிரிவில் 173 கிலோ பளுவைத் தூக்கி தங்கப் பதக்கத்தையும் வெள்ளிப் பதக்கத்தையும் 18 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் எம். பிரணவன் 210 கிலோ பளுவைத் தூக்கி வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.