தேசிய மட்ட யூடோ பாலிநகர் மாணவிக்கு வெண்கலம்

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட யூடோ போட்டியில் பாலிநகர் மகா வித்தியாலய மாணவி கு.காவியா வெண்கல பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட யூடோ போட்டி கடந்த 16ம் திகதி முதல் 18ம் திகதி வரை திருகோணமலையில் நடைபெற்றது.
இதில் 20 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான 57 கிலோ நிறைப் பிரிவில் முல்லைத்தீவு மாவட்ட பாலிநகர் மகாவித்தியாலய மாணவி காவியா குலசிங்கம் வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.