தேசிய மட்ட மல்யுத்தம் முல்லைத்தீவு மாணவர்கள் சாதிப்பு
அகில இலங்கை தேசிய மட்ட மல்யுத்த போட்டியில்
மு/வித்தியானந்தா கல்லூரி
3 வெள்ளி 1 வெண்கலம் உட்பட 4 பதக்கங்களையும் மு/பண்டாரவன்னியன் மகாவித்தியா
1 வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட மல்யுத்த போட்டி கடந்த
16,17,18,19ம் திகதிகளில் கண்டி திகன விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இதில் ஆண்களுக்கான போட்டியில் மு/வித்தியானந்தா கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ஜெ.கஜாந் வெள்ளி பதக்கத்தையும், ஜெ.வினோஜன் வெள்ளிப் பதக்கத்தையும், எஸ்.மதீசன் வெண்கல பதக்கத்தையும், பெண்களுக்கான போட்டியில் கே.சாணுஜா வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
மு/பண்டாரவன்னியன் பாடசாலையை பிரதிநிதித்துவம் செய்த ஜெ.ஜெனிஸ்வதி வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினர்.
இம் மாணவர்களுக்கான பயிற்சியினை முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்யுத்த பயிற்றுனர் P. தர்சன்(வரலாற்று ஆசிரியருமான) வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.