தேசிய மட்ட பேச்சுப் போட்டியில் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி இரண்டாமிடம்
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தமிழ்தினப் பேச்சுப் போட்டியில் யாழ்ப்பாண வேம்படி மகளிர் கல்லூரி மாணவி தேசிய ரீதியில் இராண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தமிழ் மொழித்தின போட்டிகள் கடந்த 29ம் திகதி கொழும்பு விவேகானந்தக் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் பிரிவு 4ற்கான பேச்சுப் போட்டியில் யாழ் வேம்படி மகளிர் கல்லூரி தரம் 11 மாணவி செல்வி அபிநயா றஜீபன் இராண்டாமிடம் பெற்று பாடசாலைக்கும் வடமாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.