Sat. May 16th, 2026

தேசிய மட்ட பெண்களுக்கான கோலூன்றி பாய்தலில் யாழ் வீராங்கனைகள் பதக்கங்கள் குவிப்பு

93வது தேசிய மட்ட சேர் ஜோன் காபெற் மெய்வல்லுநர் போட்டியில் கோலூன்றி பாய்தல் போட்டியில் பதக்கங்களை வழித்துத் துடைத்தனர்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 93வது தேசிய மட்ட சேர் ஜோன் காபெற் மெய்வல்லுநர் போட்டிகள் கொழுப்பு தியகம ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் 20 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த பரந்தாமன் அபிஷாளினி 3.10 மீற்றர் உயரம் பாய்ந்து தங்கப் பதக்கத்தையும்,
சுழிபுரம் விக்டோரியா கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ஜோகநாதலிங்கம் நிருஷா 3 மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும்,
யாழ்ப்பாண கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த மதியழகன் டர்ஷனா 2.90 மீற்றர் உயரம் பாய்ந்து வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed