தேசிய மட்ட பி பிரிவினருக்கான Eva கிண்ணத்தை எதிரணிகளை திணறடிக்க வைத்து நொதேண் ஸ்ரார் அணி சம்பியன்
அகில இலங்கை தேசிய மட்ட B பிரிவினருக்கான வலைப்பந்தாட்ட போட்டியில் நொதேண் ஸ்ரார் அணி எதிரணிகளை மிரட்டலுடன் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
தேசிய மட்ட B பிரிவினருக்கான அணிகளுக்கு இடையிலான Eva கிண்ணத்திற்கான சுற்றுப் போட்டி நேற்றும் இன்றும் கொழுப்பு விமானப் படை மைதானத்தில் நடைபெற்றது.
இதில் வடமாணத்தைச் சேர்ந்த தமிழ் வீராங்கனைகளைக் கொண்ட நொதேண் ஸ்ரார் அணி களம் இறங்கினர்.
இவ்வணி காலிறுதிப் போட்டியில் யாழ் பல்கலைக்கழக அணியை எதிர் கொண்டு 10:3 என்ற புள்ளிகள் வித்தியாசத்திலும், அரையிறுதி ஆட்டத்தில் ஜெயவர்த்தனேபுர பல்கலைக்கழக அணியை 11:3 என்ற புள்ளிகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று எதிரணியினருக்கு தமது மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர். இறுதியாட்டத்தில் நொதேண் ஸ்ரார் அணியை எதிர்த்து கொத்தாவல பாதுகாப்பு சேவை அணி மோதியது. இதிலும் தமது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நொதேண் ஸ்ரார் அணியினர் 12:06 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். இதில் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக நொதேண் ஸ்ரார் அணியை பிரதிநிதித்துவம் செய்த அமுதினி தெரிவு செய்யப்பட்டார்.