தேசிய மட்ட பளுதூக்கல் வேலாயுதம் மகா வித்தியாலயத்திற்கு வெண்கலம்
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலய மாணவன் கே.ஜனேந்திரா வெண்கல பதக்கத்தை கைப்பற்றி உள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டிகள் பொலனறுவை றோயல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
இதில் 17 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த கே. ஜனேந்திரா 81 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார்.