தேசிய மட்ட பளுதூக்கல் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றி முத்துத்தம்பி மகா வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் யா/முத்துத்தம்பி மகா வித்தியாலயம் பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக தேசிய மட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டி பொலநறுவையில் நடைபெற்று வருகிறது.

இதில் 17 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான 96 கிலோ எடைப் பிரிவில் முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த தி.பிரதீப் 151 கிலோ பளுவைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றி வரலாற்றுச் சாதனையை பதிவு செய்துள்ளார்.