Thu. Apr 24th, 2025

தேசிய மட்ட பளுதூக்கல் – றம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி ரி.கோசியா தங்கம்

தேசிய மட்ட கனிஷ்ட பிரிவினருக்கான பெண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் வவுனியா றம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி ரி.கோசியா தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

அகில இலங்கை தேசிய மட்ட கனிஷ்ட பிரிவினருக்கான பெண்களுக்கான பளுதூக்கல் போட்டி பொலனறுவையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் வவுனியா றம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ரி.கோசியா 53 கிலோ எடை பிரிவில் 110 கிலோ பளுவைத் தூக்கி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்