தேசிய மட்ட பளுதூக்கல் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரிக்கு நான்கு பதக்கங்கள்
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி இரண்டு வெள்ளிப் பதக்கங்கள், இரண்டு வெண்கல பதக்கங்கள் என 4 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளனர்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டி பொலநறுவை றோயல் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த வி.சாதுரியன் 17 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான போட்டியில் 55 கிலோ எடைப் பிரிவில் 129 கிலோ பளுவைத் தூக்கி வெண்கல பதக்கத்தையும்,

ச.ஷாணுஜா 17 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான போட்டியில் 81 கிலோ எடைப் பிரிவில் 75 கிலோ பளுவைத் தூக்கி வெண்கலப் பதக்கத்தையும்,

ஜெ.ஜெனுசின் 20 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான போட்டியில் 109 கிலோ எடைப் பிரிவில் 195 கிலோ பளுவைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும்,

ர. ஸ்ரீவித்தகி 20 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான போட்டியில் 71 கிலோ எடைப் பிரிவில் 107 கிலோ பளுவைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.