Wed. Jul 22nd, 2026

தேசிய மட்ட பளுதூக்கல் சுண்டுக்குழிக்கு வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் சுண்டுக்குழி மகளிர் கல்லூரிக்கு வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை கைப்பற்றி உள்ளனர்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டி பொலநறுவை றோயல் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதில் சுண்டுக்குழி மகளிர் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த அ.சானியா 20 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான போட்டியில் 87 கிலோவுக்கு மேற்பட்ட எடைப் பிரிவில் 110 கிலோ பளுவைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும்,

ஜெ.சாதனா 20 வயதிற்கு உட்பட்ட 87 கிலோ எடைப் பிரிவில் 65 கிலோ பளுவைத் தூக்கி வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed