Thu. Sep 17th, 2026

தேசிய மட்ட பளுதூக்கல் கோப்பாய் சரவணந்தாவிற்கு வெண்கலம்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த சசிகரன் அபிஷன் வெண்கல பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டி பொலநறுவை றோயல் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதில் கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலய  மாணவன்  சசிகரன் அபிஷன் 17 வயதிற்கு உட்பட்ட 102 கிலோ எடைப் பிரிவில் 141 கிலோ பளுவைத் தூக்கி வெண்கல பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

About The Author

Share This:

Leave a Reply