தேசிய மட்ட பளுதூக்கலில் வட இந்து மகளிர் கல்லூரிக்கு வெண்கலம்

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் வட.இந்து மகளிர் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த பாஸ்கரன் கயல்விழி வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டி பொலநறுவையில் நடைபெற்றது.
இதில் 17 வயதுப் பிரிவினருக்கான போட்டியில் யா/ வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த பாஸ்கரன் கயல்விழி 55 கிலோ எடைப்பிரிவில் 75 கிலோ பளுவைத் தூக்கி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.