தேசிய மட்ட பளுதூக்கலில் பூநகரி மத்திய கல்லூரி மாணவர்கள் வரலாற்றுச் சாதனை
அகில இலங்கை பாடசாலைகளுக்கான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில்
கிளி/பூநகரி மத்திய கல்லூரி பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு தேசிய மட்ட பளுதூக்கல் போட்டிகள் பொலநறுவையில் நடைபெற்று வருகின்றன.

இதில் கிளி/ பூநகரி மத்திய கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த இ.ஜெனிஸ்ரன் 20 வயதினருக்கான 55 கிலோ எடைப்பிரிவில் 145 கிலோ பளுவைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியும்,

ர.தனுகரன் 17 வயதினருக்கான 73 கிலோ எடைப் பிரிவில் 134 கிலோ பளுவைத் தூக்கி வெண்கலப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.