Thu. Jan 23rd, 2025

தேசிய மட்ட பரதநாட்டிய போட்டியில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனை

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட பரதநாட்டியப் போட்டியில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள் இரு முதலிடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட பரதநாட்டிய போட்டிகள் நேற்று முன்தினம் அநுராதபுரத்தில் நடைபெற்றது.
இதில் சிரேஷ்ட பிரிவினருக்கான தனிநடன போட்டியில் “அழகியமயிலே” எனும் பாரதியார் பாடலுக்கு நடனமாடிய
உடுப்பிட்டி மகளிர் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த
மாதினீ – ஜெகதீஸ்வரன் அவர்கள் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.
அதேபோல் “நான் இராவணன் பேசுகின்றேன்” எனும் நாட்டிய நாடகப் போட்டியிலும்
உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள் முதலிடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்