தேசிய மட்ட பரதநாட்டிய போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி முதலிடம்
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட பரதநாட்டிய போட்டியில் யா/கொக்குவில் இந்துக் கல்லூரி முதலிடத்தைப் பெற்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட பரதநாட்டிய போட்டிகள் அண்மையில் நடைபெற்றது.
இதில் கொக்குவில் இந்துக் கல்லூரி மீனவ நடனத்தில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
குறித்த மீனவ நடனம் தேசிய மட்டத்தில் சாதனை படைப்பதற்கு நடனபாட ஆசிரியர்களான திருமதி பிரபாஷினி ரஞ்சன், திருமதி ஸ்ரீவிக்னேஸவரி ஸ்ரீகாந்தன், திருமதி பேர்ளின்சைலா சந்திரதாசன், இவர்களோடு சங்கீத ஆசிரியர் திருமதி சகிலா மயூரன் ஆகியோருக்கும் கல்லூரிச் சமூகம் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.