Thu. May 1st, 2025

தேசிய மட்ட பரதநாட்டிய போட்டியில் வடமாகாணத்திற்கு 54 பதக்கங்கள்

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட பரதநாட்டிய போட்டியில் வடமாகாணம் 54 பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளதோடு,  வடமாகாணத்திற்குட்பட்ட கல்வி வலயங்கள் பெற்றுக் கொண்ட பதக்கங்கள் பற்றிய விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் யாழ்ப்பாண கல்வி வலயம் 17 முதலாமிடம், ஒரு இரண்டாமிடம் ஒரு மூன்றாமிடம் உட்பட 19 பதக்கங்களையும், வலிகாமம் கல்வி வலயம் 15 முதலாமிடம், இரு இரண்டாமிடம்  உட்பட 17 பதக்கங்களையும், தென்மராட்சி கல்வி வலயம் 6 முதலாமிடத்தையும், வடமராட்சி, முல்லைத்தீவு, வவுனியா தெற்கு கல்வி வலயங்கள் 3 முதலாமிடங்களையும், கிளிநொச்சி கல்வி வலயம் 2 முதலாமிடங்களையும்,  தீவக கல்வி வலயம் ஒரு முதலாமிடத்தையும் பெற்று வடமாகாணம் ஒட்டு மொத்தமாக 55 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்