தேசிய மட்ட நீளம் பாய்தலில் தங்கம் வென்றது மன்னார் முருங்கன் ம.வி.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட நீளம் பாய்தல் போட்டியில் மன்னார் முருங்கன் மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ஏ.கமில்ரன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் கொழுப்பு தியகம ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் 18 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் மன்னார் முருங்கன் மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ஏ.கமில்ரன் 6.91 மீற்றர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.