தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியில் நெல்லியடி மத்திய கல்லூரி மாணவன் முதலிடம்
இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியில் நெல்லியடி மத்திய கல்லூரி மாணவன் சி.கஜன் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.
இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தமிழ் தினப் போட்டி அண்மையில் கல்வி அமைச்சின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரிவு 4 இல் “கட்டுரை வரைதலும் இலக்கிய நயத்தலும்” போட்டியில் நெல்லியடி மத்திய கல்லூரி மாணவன் சி.கஜன் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்