தேசிய மட்ட தமிழ்மொழித்தின போட்டியில் சாதிக்கும் சாவகச்சேரி மகளிர் கல்லூரி மாணவிகள்
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தமிழ் மொழித்தின போட்டியில் சாவகச்சேரி மகளிர் கல்லூரி மாணவிகள் மேலும் முதலிடங்களைப் பெற்று தேசிய மட்டத்தில் சாதனைகளை பதிவு செய்து வருகின்றனர்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தமிழ்மொழித்தின போட்டிகள் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் பிரிவு 4ற்கான தனிநடிப்பு நிகழ்ச்சியில், சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் தரம் 11 இல் கல்வி கற்கின்ற செல்வரூபன் யாழிசை மாணவி முதலாம் இடத்தைப் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இதேபோல் பிரிவு 2ற்கான தனி நடன நிகழ்ச்சியில் நவநீதன் நவீனா முதலாம் இடத்தைப் பெற்று தங்க பதக்கத்தை பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.