தேசிய மட்ட தட்டெறிதல் வவுனியா தமிழ் ம.ம.வித்தியாலய மாணவன் கு.கிருஷான் தங்கம் வென்று சாதனை
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 38வது தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டியில் கு.கிருஷான் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் கொழுப்பு தியகம ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் 16 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த
கு.கிருஷான் 50.39 மீற்றர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.