Sun. Nov 15th, 2026

தேசிய மட்ட தட்டெறிதலில் ஹாட்லிக் கல்லூரி விகாஸ் வெள்ளிப் பதக்கம்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தட்டெறிதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த வினோதன் விகாஷ் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் தியகம மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் 20 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த வினோதன் விகாஷ் 43.58 மீற்றர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed