தேசிய மட்ட டென்னிஸ் போட்டிகளில் யாழ்ப்பாணம் G.K டென்னிஸ் அக்கடமி வீரர்கள் 10 பதக்கங்களை கைப்பற்றி சாதனை

தேசிய மட்ட டென்னிஸ் போட்டிகளில் யாழ்ப்பாணம் G.K டென்னிஸ் அக்கடமி வீரர்கள் 10 பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.


கடந்த 28,29ம் திகதிகளில் இலங்கை டென்னிஸ் சம்மேளனத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற தேசிய மட்ட STR 10 வயதிற்குட்பட்ட தனிநபர் டென்னிஸ் போட்டிகளில் GK Tennis Acadamy வீரர்கள்பலர் தமது வெற்றிகளை பதிவுசெய்துள்ளனர்.
9 வயதிற்குட்பட்ட போட்டியில் ஆண்கள் பிரிவில்
ஒற்றையர் ஆட்டத்தில் Level 1 நிலையில் பி.பவிசன் முதலாம் இடத்தினையும் கீ.சுஜீபன் இரண்டாம் இடத்தினையும் சி.கவிநயன் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர் .

Achiever நிலையில் ஐ.திரிசானன் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டார்.

9 வயதிற்குட்பட்ட ஆண்கள் இரட்டையர் ஆட்டத்தில் ஜ.திரிசானன், பி.பவிசன் முதலாம் இடத்தினையும் சி.கவிநயன், கீ.சுஜீபன் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர் .
9 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான level 1 ஒற்றையர் ஆட்டத்தில் க.கேனிசா முதலாம் இடத்தினையும்
7 வயதிற்குட்பட்ட பெண்கள் level 1 ஒற்றையர் ஆட்டத்தில் பா.சுபிட்சாயினி முதலாம் இடத்தினையும் ஆண்களுக்கான 7 வயதிற்குட்பட்ட இரட்டையர் ஆட்டத்தில் கீ.பவணேஸ், ந.நிலாஸ் இரண்டாம் இடத்தினையும் ஒற்றையர் ஆட்டத்தில் ந.நிலாஸ் மூன்றாம் இடத்திணையும் பெற்று யாழ் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.இப் போட்டியில் GK Tennis Academy யை பிரதிநிதித்துவப்படுத்தி 18 வீரர்கள் கலந்துகொண்டனர்.
இதில் GK Tennis Academy வீரர்கள் 5 சம்பியன் மற்றும் 3 இரண்டாம் இடங்களையும் 2 மூன்றாம் இடங்களையும் பெற்று யாழ் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.