தேசிய மட்ட கோலூன்றி பாய்தல் ஸ்கந்தவரோதயக் கல்லூரி மாணவன் டன்ஸ்சன் தங்கம் வென்றார்

இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தினரால் நடாத்தப்படும் கனிஷ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில்
யா/ஸ்கந்தவரோதயக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ந.டன்ஸ்சன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தினரால் நடாத்தப்படும் கனிஷ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் கொழுப்பு தியகம மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
இதில் 20 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ந.டன்ஸ்சன் 4.30 மீற்றர் உயரம் பாய்ந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.