Wed. Jul 16th, 2025

தேசிய மட்ட கோலூன்றி பாய்தல் அருணோதயக் கல்லூரி மாணவி புதிய சாதனையுடன் தங்கம் வென்றார்

கனிஷ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டியில் அளவெட்டி அருணோதயக் கல்லூரி மாணவி எஸ்.நிருஷிகா பெண்களுக்கான கோலூன்றி பாய்தலில் புதிய சாதனையை பதிவு செய்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

கனிஷ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் கொழுப்பு தியகம மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
இதில் 20 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் அளவெட்டி அருணோதயக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.நிருஷிகா 3.40 மீற்றர் உயரம் பாய்ந்து புதிய சாதனையை பதிவு செய்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். குறித்த போட்டியில் அளவெட்டி அருணோதயக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.டிலக்சிகா 3.10 மீற்றர் உயரம் பாய்ந்து வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்