தேசிய மட்ட கோலூன்றி பாய்தலில் ஆன்மேரி வரலாற்றுச் சாதனை
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தடகள தொடரில் பெண்களுக்கான கோலூன்றி பாய்தலில் பாசையூர் சென்.அன்ரனீஸ் றோமன் கத்தோலிக்க மகளிர் வித்தியாலய மாணவி ஆன்மேரி வெண்கல பதக்கத்தை கைப்பற்றி முதன் முதலில் பெண்களுக்கான கோலூன்றி பாய்தலில் யாழ்ப்பாண கல்வி வலயத்தில் பதக்கம் பெற்று சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தடகள தொடர் கொழும்பு சுகதாஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இதில் 18 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் பாசையூர் சென்.அன்ரனீஸ் றோமன் கத்தோலிக்க மகளிர் வித்தியாலய மாணவி ஆன்மேரி 2.80 மீற்றர் உயரம் பாய்ந்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.