தேசிய மட்ட கோலூன்றி பாய்தலில் அசத்தும் அருணோதயக் கல்லூரி
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தடகள தொடரில் ஆண்களுக்கான கோலூன்றி பாய்தலில் அளவெட்டி அருணோதய கல்லூரி மாணவன் வ.மேனுயன் வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தடகள தொடர் கொழும்பு சுகதாஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இதில் இன்று புதன்கிழமை நடைபெற்ற 18 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் அளவெட்டி அருணோதயக் கல்லூரி மாணவன்
வ .மேனுயன் 3.90 மீற்ரர் பாய்ந்து வர்ண விருதுடன் வெண்கல பதக்கத்தையும், அதே கல்லூரியைச் சேர்ந்த ஆ.தனோயன் 3.80 மீற்ரர் பாய்ந்து வர்ணவிருதுடன் 4ம் இடத்தையும் பெற்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.