தேசிய மட்ட கோலூன்றி பாய்தல் வடமாகாண வீராங்கனைகள் மேலும் பதக்கங்கள் குவிப்பு
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கோலூன்றி பாய்தல் போட்டியில் வடமாகாண வீராங்கனைகள் மேலும் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தடகள தொடர் கொழும்பு சுகதாஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இதில் இன்று நடைபெற்ற 20 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் தெல்லிப்பளை மகாஜன கல்லூரி மாணவி பி.டனுசிகா வெள்ளிப் பதக்கத்தையும்,
சுழிபுரம் விக்டோரியா கல்லூரியைப் பிரதிநிதித்தும் செய்த சி.கிறிஸ்ரிகா வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றி வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.