தேசிய மட்ட கோலூன்றி பாய்தல் சுண்டுக்குளி மாணவி வரலாற்றுச் சாதனை
சிரேஷ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டியில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த மாணவி சு. அக் ஷயா கோலூன்றி பாய்தல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றி பாடசாலையின் வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
94வது சிரேஷ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட மெய்வலுனர் போட்டிகள் தியகம மகிந்த ராஜபக்ச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் 18 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் யாழ் சுண்டிக்குளி மகளிர் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த மாணவி சு. அக் ஷயா 2.60 மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளி பதக்கத்தை வென்று பாடசாலையின் வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளார். சுண்டிக்குளி மகளிர் கல்லூரி கோல் ஊண்றி பாய்தலில் தேசிய மட்ட போட்டியில் பதக்கம் பெற்றது இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.