தேசிய மட்ட கோலூன்றி பாய்தல் மகாஜனக் கல்லூரி மாணவன் துஷாந்தன் தங்கம் வென்று அசத்தல்
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ச.துஷாந்தன் கோலூன்றி பாய்தல் போட்டியில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் கொழுப்பு தியகம ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் 20 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ச.துஷாந்தன் 4.50 மீற்றர் உயரம் பாய்ந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்