Sat. May 16th, 2026

தேசிய மட்ட கோலூன்றி பாய்தலில் ஸ்கந்தவரோதயக் கல்லூரி மாணவிகள் சாதிப்பு

93 வது தேசியமட்ட சிரேஷ்ட சேர் ஜோன் காபெற்  தடகளப் போட்டியில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி மாணவிகள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர்.
93 வது தேசியமட்ட சிரேஷ்ட சேர் ஜோன் காபெற் தடகளப் போட்டி கொழும்பு தியகம மகிந்தராஜபக்‌ஷ விளையாட்டரங்கில் நேற்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
இதில் 16 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில்
யா/ஸ்கந்தவரோதயக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ப.வைஸ்ணவி  2.40 மீற்றர் உயரம் பாய்ந்து   முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை தனதாக்கி கொண்டதோடு அதே கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த சி.விதுர்சனா 2.30 மீற்றர் உயரம் பாய்ந்து   இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினர். இவர்களுக்கான பயிற்சியை தேசியத்தில் கோலூன்றி பாய்தலில் பல வீரர்களை பதக்கங்களை பெற வைக்கும் சி.சுபாஸ்கரன் வழங்குவது குறிப்பிடத்தக்கது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed