Wed. Jul 16th, 2025

தேசிய மட்ட கோலூன்றி பாய்தலில் அளவெட்டி அருணோதயக் கல்லூரி வீராங்கனை சண்முகப்பிரியாவிற்கு வெண்கலம்

இலங்கை மெய்வல்லுநர் சங்கம் நடாத்தும் கனிஷ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டியில் பெண்களுக்கான கோலூன்றி பாய்தலில் அளவெட்டி அருணோதயக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த பி.சண்முகம்பிரியா வெண்கல பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

இலங்கை மெய்வல்லுநர் சங்கம் நடாத்தும் கனிஷ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் கொழுப்பு தியகம மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் 18 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் அளவெட்டி அருணோதயக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த பி.சண்முகப்பிரியா 2.40 மீற்றர் உயரம் பாய்ந்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்